Saturday, 13 September 2014

TAMIL

ஆரோக்கியமான உணவின் நன்மைகள்


1 எடையைக் கட்டுப்படுத்துகிறது


சரியான உணவு மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சி நாம் அதிக உடல் எடையைத் தவிர்க்க உதவி, ஒரு ஆரோக்கியமான எடையை பராமரிக்க துணைபுரிகிறது.மயோகிளினிக்கின் உடல் ஆராய்ச்சிப்படி நாம் நாள்முழுவதும் செய்கிற எளிய வழிகளின் செயல்களின்படியே உடற்பயிற்சியின் நன்மைகளை பெறமுடியும். (எடு) வாகனத்தை ஒட்டிவதைவிட நடக்கலாம், மாடிப்படியை உபயோகிக்கலாம்.குறைந்த அளவிலான கொழுப்பு உணவு உண்ணுவதும் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.நாம் ஒரு நாளை ஆரோக்கியமான காலை உணவோடு தொடங்கும் பொழுது அது பட்டினிப் பிடிப்புகளை தவிர்க்க உதவும்.இதனால் மதிய உணவிற்கு முன் நம் உடல் வேகமாக இயங்குகிறது என்று அமெரிக்க உணவு கட்டுப்பாட்டு இயக்கம் பரிந்துரைக்கிறது. இச்சங்கம் ஒரு நாளைக்கு ஐந்து பழங்கள்/காய்கறிகள் உண்ண வேண்டும் எனக்கூறுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்து குறைவான கலோரிகள் உள்ளன.அது நமது எடையை குறைக்க உதவுகிறது.

2 மனவளத்தை அதிகரிக்கிறது :

நமது உடலுக்கு நாம் நல்லது செய்யும் பொழுது தான் அதுவும் நமக்கு நல்ல மனநிலையைத் தருகிறது. உடற்செயல்பாடு நாம் அடிக்கடி நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க மூளை ரசாயானங்ககளைத் தூண்டிவிடுகிறது என மயோகிளினிக் தெரிவிக்கிறது. நாம் நமது நம்பிக்கையையும் சுயமரியாதையையும் அதிகரிக்க உதவும். உடற்பயிற்சியின் குறுகியகால விளைவுகளில் மன அழுத்தம் குறைவதும் அடங்கும் என உடற்பயிற்சி அறிக்கைகள் மற்றும் அமெரிக்க கவுண்சில் தெரிவிக்கிறது. ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் புரதச் சத்தை அதிகரித்து கொழுப்புச் சத்தை குறைத்து இருதய நோய், பக்கவாதம்,இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுக்கிறது. இவை இரத்தம் சீராக ஒட அனுமதிப்பதோடு இருதய் சம்பந்தப்பட்ட வியாதிகளின் அபாயத்தை குறைக்கிறது. ஒழுங்கான உடற்பயிசியும் உணவு பழக்கமும் பலதரப்பட்ட நோய்களை தடுப்பதோடு நீரழிவு நோய், மன அழுத்தம், சிலவகை கேன்சர் மற்றும் எலும்பு மூட்டு நோய்களை தடுக்கிறது என மயோகிளினிக் கூறுகிறது.

3 சக்தியை அதிகரிக்கிறது

சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் சக்தி குறைகிறது என்பதை நாம் அனுபவித்திருகிறோம். தானியங்கள், மாமிச உணவு ,குறநத கொழுப்பு சத்து கொண்ட பால் உண்வுகள் ,பழங்கள், காய்கறிகள் ஆகியவை சமச்சீர்
உணவாக அமைவதுடன் உடலுக்கு தேவையான சக்தியையும கொடுக்கிறது. ஒழுங்கான உடற்பயிற்சி தசைகளின் பலத்தை அதிகரிப்பததோடு நல்ல திடத்தை கொடுத்து அதிக சக்தியை கொடுப்பதாக மயோகிளினிக் கூறுகிறது. உடற்பயிற்சி தேவையான பிராண வாயு மற்றும் சத்துப்பொருட்களை திசுக்களுக்கு தருவதோடு இருதயம் மற்றும் இரத்த நாளங்கள் சிறப்பாக இயங்கவும் அன்றாட அலுவல் செய்யவும் சக்தி தருகிறது. ஆழ்ந்த மற்றும் அயர்ந்த தூக்கத்தையும் கொடுத்து சக்க்தியை இது அதிகரிக்கிறது.

4 நீண்ட ஆயுள் தருகிறது

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கையாள்வது நீண்ட ஆயுசை தருகிறது. 13000 பேரிடம் ஆராய்ச்சி செய்து உடற்பயிற்சிக்கான அமெரிக்கக் கவுண்சில் அறிக்கை வெளியிட்டது. ஒழுங்காக உடற்பயிற்சி செய்யாதவர்களைவிட தினந்தோறும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்கிறவர்கள் காலத்துக்கு முன்னே மரிக்கும் வாய்ப்பினின்று தப்பித்துக் கொள்கிறார்கள். அருமையானவர்களோடு அதிக நேரம் இருக்கும் நோக்கத்தோடும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவு வகைகள்
பச்சையாக நறுக்கப்பபட்ட பழ உணவு

தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு பழம் 1 , சிரிய திராட்சைகுலை 1
  • பெரி பழம் 1
  • வாழைப்பழம் 1
  • அந்தகாலத்தில் கிடைக்கும் பழம் ( ஆப்பிள், பேரிச்சை ) 1 துண்டு
  • தேன் 2 மேசை கரண்டி
  • வெனிலா ½ கரண்டி


செய்முறை:

ஆரஞ்சு , திராட்சை பழங்களை தோலுரித்துக் கொள்ளவும்.கால் அல்லது பாதியாக அவைகளை குறுக்காக வெட்டவும் ( திராட்சை பழம் தோலுரித்தால் மட்டும் போதும் ). அப்படியே பெரி பழங்களையும் கால் அல்லது பாதியாக வெட்டவும்.அந்த காலத்தில் கிடக்கும் பழங்ககளையும் இப்படியே தயார் செய்யவும். எல்லாவற்றையும் பெரிய பாத்திரம் ஒன்றில் கொட்டவும்.
தேன் மற்றும் வெனிலா பயன்படுத்தினால் மிதமான வெப்பத்தில் ஒரு நிமிடம் வைக்கவும்.இதை பழங்களோடு சேர்த்து கிளறவும். காற்றுபுகாத பாத்திரத்தில் கொட்டி கரண்டியோடு பார்சல் செய்யவும்.

ஓட்ஸ் சூப்

அன்றாடக் உண்வில் ஓட்சை சேர்த்துக்கொள்ளும் இலகுவான முறை ஓட்ஸ் சூப் ஆகும். சிலவகை பொருட்களைக் கொண்டு இதை செய்து ரொட்டித் துண்டுகளோடும், பசியை ஆற்றவும் பயன்படுத்தலாம். நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் இது பொருத்தமானது.





தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் 1 கப்
  • வெங்காயம் பாதி- சிறிதாக நறுக்கப்பட்டது
  • பச்சை மிழகாய் 1 “ “
  • பூண்டு 1 பல் அரைத்தது
  • உப்பு தேவையான அளவு
  • மிழகு தூள்- சிறிய அளவு
  • தண்ணீர் 1 கப்
  • பால் 1 கப்
  • எண்ணெய்- 2 மேசை கரண்டி
  • சிலாந்திரோ


செய்முறை

  • வானவில் எண்ணெய்யை விடு வெங்காயம், பச்சை மிழகாய், பூண்டு ஆகியவற்றை வதக்கவும்.
  • ஓட்சை சேர்த்து 2 மணி நேரம் பொரிக்கவும்
  • உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து 2 மணி நேரம் கொதிக்க வைக்கவும்
  • பால் மற்றும் மிழகு தூளை சேர்த்து கொதிக்க வைக்கவும்
  • சில்லாந்திரோவை அதின்மேல் தூவவும். ரோட்டடிதுண்டோடு சூடாக பரிமாறவும்.


பீட்ருட் மாதுளம் பழம் சூஸ்

தேவையான பொருட்கள்

  • பீட்ருட் 1
  • மாதளம்பழம் 1
  • லுமிச்சை பழம் 1
  • சர்க்கரை அல்லது தேன் 2 மேசை கரண்டி


செய்முறை
  • பீட்ருட்டை கழுவி தோலுரிக்கவும்.சிரிய துண்டுகளாக வெட்டி அரைப்பானில் போடவும்.
  • மாதுளம்பழத்தை வெட்டி விதைகளை தனியாக எடுத்து அரைப்பானில் போடவும்
  • 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  • வடிகட்டியால் வடிகட்டவும்
  • லுமிச்சை சாறு, சர்க்கரை சேர்த்து மலும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்
  • ஆரோக்கியமான புத்துணர்வூட்டும் இந்த பீட்ருட் மாதளம் பழ சாற்றை அருந்தி மகிழவும்.


முளைதானியங்களால் ஆன உணவு


விதைகள் அல்லது தானியங்களை முளைக்கவிடுவதே முளைவிடுதல் ஆகும். இது இயற்கையாகவே தானியத்தின் சத்தை அதிகரிக்கும். தானியத்தின் செரிக்கும் தன்மையையும் இது அதிகரிக்கும்.முளைதானியத்தில் விட்டமின் மற்றும் தாது சத்துக்கள் அதிகமாக இருப்பதோடு கார்போஹைரேட் மற்றும் கலோரியை குறைக்கிறது. எந்த வித தானியத்தையும் முளைக்க விடலாம். சில தானியங்கள் முளைத்தபின் நிறம், வாசனை மாறுபடும்.இந்த உணவில் பாசிப்பயறு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர கொண்ட கடலை மற்றும் பிற பீன்ஸ்களையும் பயன்படுத்தலாம்.


தேவையான பொருட்கள்

  • முளைத்த பாசிப்பயறு 1 கப்
  • வெங்காயம்- பாதி
  • தக்காளி 1
  • பச்சை மிழகாய்
  • எலுமிச்சை பாதி
  • உப்பு
  • கொத்தமல்லி தழை
  • தேன்


செய்முறை

  • வெங்காயம், தக்களி, முளத்த பாசிப்பயறு,மல்லி தழை,சிலாந்திரோ தேனை கலக்கவும்.
  • சில துளி எலுமிச்சை சாற்றை சேர்த்து அதோடு உப்பையும் சேர்க்கவும்
  • எல்லாவற்றையும் ஒன்றுசேர கலந்து பரிமாறவும்.

இன்றைய காலகட்டத்தில் நம் உணவு தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. நாம் நாள்தோறும் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் நமக்கு ஆற்றல் வேண்டும். மனிதகுலத்தை சேர்ந்த நாம் 1992இல் இருவது சதவிகிதம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறோம், 1952இல் 












பன்னிரண்டு சதவிதம் அதிகமாக உணவு உட்கொள்கிறோம் ஆனால் உணவு என்றால் என்ன ? அறிவியல் படி உணவு என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்கொள்ளும் ஒரு ஆற்றல் நிறைந்த பொருளாகும், ஒரு தனி மனிதனின் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் உணவு உட்கொள்ளவேண்டும். பொதுவாகக் கூறினால் உணவு என்பது பசியைப்போக்கும் ஒரு பொருளாகும். உணவு என்னும் சொல் இரண்டு சொற்களால் ஆனது, போடா மற்றும் பாடர் எனப்படும் . உணவு பலவகைப்படும், கொழுப்பு சத்து தரக்கூடிய ஆரோக்கியமான உணவு, இந்திய உணவு, சீன உணவு, ஜெர்மானிய உணவு, மற்றும் அர்ஜென்டீனிய உணவு மற்றும் பலவகைப்படும். ஒவ்வொரு உணவு வகை, அந்தந்த நாட்டு கலாச்சாரத்தில் இருந்து உருவானது. இந்திய உணவு அக்காலத்தில் அரசரை மகிழ்விக்க பல உணவு வகைகள் உருவாக்கப்பட்டன. நாம் ருசியாக நவரசமான உணவு உண்ணும்போது நமக்கு மகிழ்ச்சி தரத்தூண்டுகிறது. ..சாக்லேட் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.இதனால்தான் இதைstress reliever’என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தர்ப்பூசினி பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு இரத்த சோகையை தடுக்கும் வலிமையுடையது . தர்ப்பூசினி பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு இரத்த சோகையை தடுக்கும் வலிமையுடையது .



உணவு


பழந்தமிழ் இலக்கியங்களை மனிதனின் கலைக்களஞ்சியம் என்றே கூறலாம். காதல், குற்றம், நட்பு, கேள்வி, சூது, துறவு, தூது, நாடு, புகழ், பெருமை, பேதைமை, மானம், பொறையுடைமை, மருந்து என்று அகவியல் வாழ்க்கையையும் புறவியல் வாழ்க்கையையும் பற்றிய பரவலான தலைப்புகளை தமிழ் இலக்கியங்கள் உள்ளடக்கியுள்ளன, இப்பட்டியலில் உணவும் அடங்கும்.
நமது முன்னோர்கள் எதிர்காலத் தலைமுறையினரின் நலன் கருதி அன்றே தாங்கள் உண்ட உணவினை மட்டும் பதிவு செய்திடாமல், உணவு உட்கொள்ளும் விதம், முறை, பழக்கங்கள், உணவே மருந்தாதல், உணவின் பன்முகத்தன்மை போன்ற பலவற்றை பதிவு செய்தே உயிர் நீத்தனர் என்பதனை நினைத்து பெருமையடையலாம்.
தமிழ் இலக்கியங்களில் உணவு பற்றிய குறிப்புகளை மேலும் காண்போம்.

உண்ணும் முறை

அகத்தியரின் சீடரான தேரையர் எழுதிய 'பதார்த்த குண சிந்தாமணி ' எனும் நூல் இப்பட்டியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியவாழ்வு வாழ முடியும் என்கிறார் தேரையர். மேலும் இந்த உணவுகளை எந்த வரிசையில் உட்கொள்வது பற்றியும் தனது "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.





---- (*புலவர்/ சீடன்*) அகத்தியரின் சீடரான தேரையர்

ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ ருப்பொடுசா
காதி யுரைப்பப்பா லந்தத்திற்-கோதிறுவர்ப்
பாந்ததியுப் பூறியகா யாதிவகை சேருணவை
மாந்ததிக கத்தையுறு வாய்.
--அகத்தியரின் சீடரான தேரையர்
முதலில் இனிப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து புளிப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும்,  அடுத்து ப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து கீரை முதலானவைகளுடன் காரச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், உட்கொண்டு முடிவில் துவர்ப்பு, தயிர், ஊறுகாய், என்ற வரிசையில் உணவை உட்கொண்டால் எப்போதும் சுகத்தையே கொடுக்கும் என்கிறார்.

மேலும் இவ்வுணவுகளை எவ்வாறு உட்கொள்வது என்பதையும் அவரே கூறுகிறார் ........

முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு முழுவுணலி
லக்கா ரணமன்ன சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங் காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும் வளியுமின்றே
--அகத்தியரின் சீடரான தேரையர்


சிறியவர், பெரியவர், ஆரோக்கியமானவர், நோயாளி என பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால் வயிறு அளவுக்கே உணவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு, பலாகாரம் போன்ற பதார்த்தங்கள் அரை வயிறும், பால், மோர், நீர் போன்றவை கால்வயிறு அளவுக்கு எடுத்துக் கொள்ளக் கூறுகிறார். 
நவீன மருத்துவமும் இத்தகைய கருத்துக்களையே முன்மொழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமைக்கும் முறை
பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் மடை நூல் என அழைக்கப்படுகிறது. அதனைப் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை, மணிமேகலை, பெருங்கதை முதலிய நூல்களில் கூறப்படுகின்றன. காலத்திற்கும், நிலத்துக்கும் ஏற்ற உணவுகளை அந்நூல்களில் அறிந்துகொள்ளலாம். சீவக சிந்தாமணியில் முத்தியிலம்பகத்தில் இருது நுகர்வு என்னும் பகுதியில் சில பெரும்பொழுதிற்குரிய உணவு வகைகள் கூறப்பட்டுள்ளன.
நமது முன்னோர் மனித நடவடிக்கைகளையும் நன்கு கவனித்துள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு:
உட்கொள்ளும் முறைகள்
பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்
  1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
  2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
  3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
  4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
  5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
  6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
  7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
  8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
  9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
  10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
  11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
மேலும் தொல்காப்பியத்தில் ஐந்நிலங்களில் வாழ்ந்த மனிதர்கள் உட்கொண்ட உணவுப் பற்றி குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தாமரை,மந்தாரை,வாழை போன்ற பல இலைகளை மக்கள் உண்ண பயன்படுத்தியதாகவும் குறிப்புகள் உள்ளன.
----- தமிழகத்திள் உள்ள ஐந்நிலங்கள்
    


தமிழர்களின் உணவு மரபு
தமிழகம் தனது உணவு மற்றும் உணவின் ருசிக்கு பிரபலமானது.தமிழகத்திற்கு மிகவும் செழிப்பான உவு மரபு உள்ளது.சைவம் மற்றும் அசைவம் போன்ற இரண்டு வகைகளிலும் தமிழக சமையல் கலைஞர்கள் பெருமைக்கு திகழ்ந்துள்ளார்கள்.தமிழக உணவின் நறுமணம் மற்றும் அதன் சுவையும் அதில் சேர்க்கப்படும் பொருள்களே காரனம் என்று கூறலாம்.கறிவேப்பிலை,கடுகு,கொத்தமல்லி,இஞ்சி,பூண்டு,மிளகாய்,
மிளகு,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம்,தேங்காய்,மஞ்சள் பொன்ற பலவற்ற பொருட்கள் பயன் படுத்த படுகின்றன.
அரிசி மற்றும் பருப்பு வகைகள் தமிழகத்தின் உணவு மரபிற்கு முக்கிய பங்கு அளிக்கின்றது.சாதம் தென்னிந்தியாவிலே அனைவரும் பெரும்பாலும் உட்கொள்ளும் உணவாகும்.
  
                                             





தமிழ்நாட்டின் பகுதி உணவு வகைகள்
செட்டிநாடு :-
தமிழகத்தில் உள்ள காரைக்குடியும் அதன் சுற்று வட்டாரப் பகுதியும் செட்டினாடு என்று அழைக்கப்படுகிறது.ஏனென்றால் இந்த பகுதியில் பெரும்பாலும் வாழும் மக்கள் செட்டியார்களே.இங்கு இடியாப்பம், பால் பணியாரம், த்தப்பம் போன்ற பல உணவுகள் மக்கள் செய்து உண்பர்ர்.அசைவ உணவுகள் பெரும்பாலும் கோழியை வைத்து செய்யப்படுபவை பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது.

----- (செட்டிநாடு உணவு விருந்து)
-----செட்டிநாடு வெல்ல பணியாரம்
தென் தமிழ்நாடு
மதுரை,திருநெல்வேலி,விருதுநகர் பொன்ற தென் தமிழக மாவட்டங்களில் அசைவ உணவு மிக பிரபலம்.கோழி,ஆட்டுக்கறி போன்ற பலவிதமான பொருட்களை வைத்து அசைவ உனணவு சமைக்க படுகிறது.
மைதா மாவில் செய்யப்படும் உணவு பொருள் புரோட்டா.இது மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி,நாகர்கோவில் போன்ற இடங்களில் உணவுகளிலும்,வீடுகளிலும் செய்து வழங்கப்படுகிறது.
மதுரைக்கு என்று பல தனிப்பட்ட உவு வகைகள் உள்ளது.ஜிகர்தண்டா, முட்டைப் புரோட்டா,பருத்திப்பால்,கறிதோசை, எண்ணெய் தோசை போன்ற பல அரிய உணவு வகைகள் மதுரை மாநகரில் கிடைக்கும்.

(பரோட்டா) (தோசை)

நாஞ்சில் நாடு (ன்னியாக்குமாரி)-
ன்னியாக்குமாரி தனது மீன் குழம்பிற்கு மிக பிரபலம்.ஏனென்றால் இப்பகுதி சுற்றிலுமே கடல் சார்ந்த பகுதி ஆகும்.வங்காள வரிகுடா,அரபியக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் குமரியை சூழ்கின்றன.தேங்காயும் நாஞ்சில் நாட்டின் உணவு மரபிற்கு முக்கிய பங்கு அளிக்கின்றது.தேங்காய் எண்ணை பல உணவுகளில் அடிப்படையாக பயன் படுத்தப்படுகிறது.


(தமிழர்களின் வழக்கம்போல                                         செய்யப்பட்ட மீன் குழம்பு)


கொங்கு நாடு
கோவை,ஈரோடு,சேலம்,நாமக்கல்,கரூர் போன்ற பகுதிகள் கொங்கு நாடு பகுதிகள் என்று அழைக்கப்படுகிறது.இங்கு விளையும் பயிர்களே உணவுகளில் அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. சந்தவை, ஒப்புட்டு,தேங்காய் பால்,கச்சாயம், அரிசி, பருப்பு சாதம், ராகிப்புட்டுமாவு, வாழைப்பூ பொறியல், கம்புப் பணியாரம், கடலை உருண்டை, ள்ளு உருண்டை, பொரி உருண்டை போன்ற பல வகை உணவுகள் செய்யப்படுகின்றன.
------(கடலை உருண்டை) (எள்ளு உருண்டை)



ஸ்ரீலங்கா/ இலங்கை
ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் தமக்கெனப் பெயர்போன உணவு மரபு கொண்டுள்ளனர்.இட்லி, இடியாப்பம், சேவை போன்ற பல உணவு வகைகள் அனைவரும் அறிந்தது.


 
__>(இடியாப்பம்
                                           

        இட்லி





மேலும் படங்கள் –
---கத்திரிக்காய் 
மிளகாய்
தேங்காய் 
-கொத்தமல்லி
 பூண்ட 
கருவேப்பிலை
அரிசி/சாதம்
- மஞ்சள்
* மேல்குறிப்பிடப்பட்ட அனைத்து பொருட்க்களும் தமிழர்களுக்கு உரிய சிறப்பு உணவு பொருட்களாகும்.*




விழாக்கால உணவுகள்


No comments:

Post a Comment